ADDED : செப் 12, 2025 02:24 AM
புதுடில்லி:வட மேற்கு டில்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, வழிப்பறி செய்யப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 7ம் இரவில், ஜஹாங்கிர்புரி பகுதியை சேர்ந்த சுனில், 34, என்பவரை, அம்பேத்கர் பார்க் என்ற இடத்தில் மடக்கிய இருவர், அவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அணிந்திருந்த நகை, மொபைல் போன் மற்றும் ரொக் கத்தை பறித்து தப்பினர் .
புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது, ஜமில், 25, மொய்னுதீன், 30, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது . அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே பலரிடம் வழிப்பறி செய்தது தெரிந்தது.
அதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வசமிருந்து மொபைல் போன்கள், தங்க செயின், 750 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.