ADDED : மார் 27, 2025 11:06 PM
மாரத்தஹள்ளி: பி.எம்.டி.சி., பஸ் பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
பெங்களூரு, மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து ஹெச்.ஏ.எல்., நோக்கி பி.எம்.டி.சி., பஸ் நேற்று முன்தினம் இரவு சென்றது.
இப்பஸ், பழைய விமான நிலைய சாலையில் உள்ள மாரத்தஹள்ளி இஸ்ரோ மையம் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது.
சம்பவ இடத்திலே பைக்கில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். ஜீவன் பீமா நகர் போக்குவரத்து போலீசார் விசாரித்தனர். பஸ் ஓட்டுனர் மகேஷை கைது செய்தனர்.
விசாரணையில் பைக்கை ஓட்டி சென்றவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த தபஸ் டாலி, 35, என தெரியவந்தது. இவர், 'ரேபிடோ' நிறுவனத்தில் பைக் டாக்சி ஓட்டி வந்தார். மற்றொருவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டன. டிரைவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.