கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை கேப் ரோட்டில் போக்குவரத்து அனுமதி
கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை கேப் ரோட்டில் போக்குவரத்து அனுமதி
கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை கேப் ரோட்டில் போக்குவரத்து அனுமதி
ADDED : மே 14, 2025 02:11 AM
மூணாறு:கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு வழியாக நேற்று காலை முதல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே ரோடு அகலப்படுத்தும் பணி ரூ.381.76 கோடி செலவில் 2017 செப்டம்பரில் துவங்கியது. 2024 ஜன.,5ல் ரோடு அதிகாரபூர்வமாக பயன்பாட்டிற்கு வந்தது. ரோடு அகலப்படுத்தும் பணியின் போது கேப் ரோட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மலையை குடைந்து பாறைகள் உடைக்கப்பட்டன. அதனால் கேப் ரோட்டில் மழை காலங்களில் மண் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
பாறைகள் சரிவு:
கேப் ரோட்டைச் சுற்றிலும் நேற்று முன்தினம் மதியம் 3:00 மணி முதல் பலத்த மழை பெய்தது. அப்போது 3:45 மணிக்கு பாறைகள் ரோட்டில் சரிந்து விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது. தேவிகுளம், சாந்தாம்பாறை பகுதிகளைச் சேர்ந்த போலீசார் மண் அள்ளும் இயந்திரம் மூலம் பாறைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். எனினும் பாதுகாப்பு கருதி கேப் ரோடு வழியாக போக்குவரத்துக்கு தடை விதித்து இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார். அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு நேற்று காலை முதல் கேப் ரோடு வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.