பயங்கரவாதிகளுடன் மோதல் மூன்று போலீசார் உயிரிழப்பு
பயங்கரவாதிகளுடன் மோதல் மூன்று போலீசார் உயிரிழப்பு
பயங்கரவாதிகளுடன் மோதல் மூன்று போலீசார் உயிரிழப்பு
ADDED : மார் 28, 2025 06:49 AM
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சன்யால் வனப்பகுதியில் ஐந்து பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்புடையினர், பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; காஷ்மீர் போலீசார் மூவர் வீர மரணமடைந்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.