சுப்ரீம் கோர்ட்டில் மூன்று நீதிபதிகள் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டில் மூன்று நீதிபதிகள் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டில் மூன்று நீதிபதிகள் பதவியேற்பு
ADDED : மே 31, 2025 01:09 AM

புதுடில்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூன்று நீதிபதிகள் பணியிடங்கள் காலியாகின.
இந்த பணியிடங்களுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, குவஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அதுல்.எஸ்.சந்துர்கர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து, மூன்று நீதிபதிகளும் நேற்று பதவியேற்றனர்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், அவர்கள் மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை, தன் முழு பலமான 34ஐ எட்டியுள்ளது.