பாலஸ்தீன கொடியை ஏந்தியவர்கள் கைது
பாலஸ்தீன கொடியை ஏந்தியவர்கள் கைது
பாலஸ்தீன கொடியை ஏந்தியவர்கள் கைது
UPDATED : ஜூலை 15, 2024 05:55 PM
ADDED : ஜூலை 15, 2024 03:09 PM

பாட்னா: பீஹாரில் ஊர்வலத்தின் போது, பாலஸ்தீன கொடியை ஏந்தி சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பீஹார் மாநிலம் நவாடாவில் நடந்த ஊர்வலம் ஒன்றில், சிலர் பாலஸ்தீன கொடியை ஏந்தி சென்று அசைத்து காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இன்று (ஜூலை 15) 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வரும் சூழலில், பாலஸ்தீன கொடியை காட்டியது எதற்கு என்பது குறித்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு பாலத்தீனர்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த ஜூலை 13ம் தேதி பீஹாரில் தர்பங்கா மாவட்டத்தில் நடந்த ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடியை ஏந்தி சென்றதாக , இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.