படுக்கையறை வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டிய மூவர் கைது
படுக்கையறை வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டிய மூவர் கைது
படுக்கையறை வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டிய மூவர் கைது
ADDED : செப் 14, 2025 03:36 AM
திருவனந்தபுரம்,:திருமணமான இளம்பெண், அவரது ஆண் நண்பருடன் இருந்த படுக்கை காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், கண்ணுாரை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணுக்கும், அளக்கோடை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இளம்பெண் வீட்டுக்கு அடிக்கடி அந்த இளைஞர் வருவதை கவனித்த கீழக்கண்டியைச் சேர்ந்த சகோதரர்களான ஷமல், 21, ஷியாம், 24, ஆகியோர் அவர்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர். இதற்காக, பெண்ணின் வீட்டுக்குள் தெரியாமல் சென்று படுக்கையறையில் கேமராவை வைத்தனர்.
பின், இளம்பெண், ஆண் நண்பருடன் இருந்த படுக்கை காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து, அப்பெண்ணிடம் காட்டி பணம் பறித்து, அவரை பலாத்காரம் செய்தனர்.
அந்த வீடியோ காட்சியை, லத்தீப், 48, என்பவரிடம் கொடுக்க, அவரும் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
அப்பெண் புகாரில், லத்தீப், ஷமல், ஷியாம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.