ADDED : ஜூன் 20, 2025 12:36 AM

நம் நாட்டில் ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் சூழல் விரைவில் உருவாகும். அப்படியான சமூகத்தின் உருவாக்கம் வெகுதொலைவில் இல்லை. மொழிகளை நம் கலாசாரத்தின் மீதான ஆபரணங்களாக கருதுகிறேன். நம் மொழிகள் இன்றி, நாம் உண்மையான இந்தியராக இருக்க முடியாது. தாய் மொழியே, நம் நாட்டின் அடையாளம்.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
வெட்கப்பட வேண்டும்!
பீஹார் மக்களுக்கு அளித்த நுாற்றுக்கணக்கான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இங்கு வர பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பை வழங்கவோ, பணவீக்கத்தை குறைக்கவோ, ஏழ்மை நிலையை போக்கவோ பீஹாருக்கு அவர் வரவில்லை. மாறாக, மக்களிடம் வெறுப்பு அரசியலை பரப்பவே மோடி வருகிறார்.
தேஜஸ்வி யாதவ்
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
அரசியலமைப்பு உரிமை!
ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது சலுகை அல்ல; இது, நம் அரசியலமைப்பு உரிமை. மாநில அந்தஸ்து என்பது நமக்கு பரிசுப் பொருள் அல்ல; நம் மக்களுக்கான உரிமை. யூனியன் பிரதேச அந்தஸ்து, அரசின் நிர்வாகத்திற்கு ஒரு தடைக்கல்லாக உள்ளது. இதை நிர்வகிப்பது, காற்று இல்லாமல் காற்றாடியை பறக்கவிடும் முயற்சி.
பரூக் அப்துல்லா
தலைவர், தேசிய மாநாட்டு கட்சி