ADDED : ஜூன் 08, 2024 11:47 PM

லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி கட்சி நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துஉள்ளது. எங்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது. இதன் வாயிலாக எதிர்மறை அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. நேர்மறை அரசியல் துவங்கியுள்ளது.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
இருவரின் பொறுப்பு!
ஜனநாயகத்தின் சேவகர்களாக தங்களை கருதும் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் ஆசியுடன் இந்த ஆட்சி அமைகிறது. அரசியலமைப்பு, சட்டம் மற்றும் ஜனநாயகத்தை காக்க வேண்டியது இந்த இருவரின் பொறுப்பு.
சஞ்சய் ராவத், மூத்த தலைவர் சிவசேனா, உத்தவ் அணி,
அரசு நிலைத்திருக்கும்!
தே.ஜ., கூட்டணி அரசு அதிக காலம் நீடிக்காது என காங்கிரஸ் கூறுவதற்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. நிதீஷ், சந்திரபாபு ஆகியோரே, மோடியே நாட்டை வழிநடத்தக் கூடிய வலுவான தலைவர் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஜெய்ராம் தாக்குர், ஹிமாச்சல் முன்னாள் முதல்வர், பா.ஜ.,