சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் 'குற்றவாளி'
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் 'குற்றவாளி'
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் 'குற்றவாளி'
ADDED : ஜூலை 18, 2024 10:07 PM
புதுடில்லி: ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது சிறுமியின் ஆடைகளைக் கழற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை, குற்றவாளி என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வாலிபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
போக்சோ சட்டம் மற்றும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைத்தல், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து விடுதல், பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கூடுதல் அமர்வு நீதிபதி அமித் சஹ்ராவத் விசாரித்து வந்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, தன் வாக்குமூலத்தில் நிலையானதாக இருந்ததால், அவர் நம்பகமான சாட்சி என்று அறிவிக்கப்பட்டு, வாலிபரை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி. அவரது சாட்சியத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. வாலிபருக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விவாதங்கள் பின்னர் நடைபெறுமென நீதிபதி அறிவித்துள்ளார்.