Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/டில்லியில் சிறப்பாக நடந்த முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு

டில்லியில் சிறப்பாக நடந்த முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு

டில்லியில் சிறப்பாக நடந்த முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு

டில்லியில் சிறப்பாக நடந்த முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு

UPDATED : ஜன 29, 2024 06:32 PMADDED : ஜன 29, 2024 05:43 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள், பாசறைக்கு திரும்பும் நிகழ்வு டில்லி விஜய் சவுக்கில் நடந்தது. ஆயுதப்படை வீரர்கள், டிரம்ஸ் இசைக்குழுவினர் அணிவகுப்பு நடத்தினர்.

குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த மூன்றாவது நாள், அதில் பங்கேற்ற முப்படை வீரர்கள் தங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு நடப்பது வழக்கம். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வு புதுடில்லியின் விஜய் சவுக்கில் நடந்தது.Image 1225185முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் வாத்திய கருவிகளை இசைக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு விழா நடக்கும் இடத்துக்கு வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றனர். நிகழ்வில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Image 1225186ராணுவம், கடற்படை, விமானப்படை, மாநில போலீஸ், மத்திய ஆயுதப்படை வீரர்கள், டிரம்ஸ் இசைக்குழுவினர் அணிவகுப்பு நடத்தினர். நிகழ்ச்சியை காண மக்கள் ஆர்வமுடன் திரண்டனர். தேசப்பற்று பாடல்கள் இசைத்தப்படி அணிவகுப்பு நடந்தது. சக்ரவியூகம், வசுதேவ குடும்பகம், பிஎஸ்எல்வி ராக்கெட், சூரியன் உள்ளிட்ட வடிவில் வீரர்கள் அணிவகுப்பு நடத்தி அசத்தினர்.Image 1225187

பழைய, புதிய பார்லிமென்ட் கட்டடங்கள் மற்றும் ராஷ்டிரபதி பவனில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூவர்ணங்களில் வண்ண விளக்குகள் ஜொலித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us