கெஜ்ரிவால் சிறைவாசம் தொடர்கிறது: ஜாமின் மீதான தடை நீடிக்கிறது
கெஜ்ரிவால் சிறைவாசம் தொடர்கிறது: ஜாமின் மீதான தடை நீடிக்கிறது
கெஜ்ரிவால் சிறைவாசம் தொடர்கிறது: ஜாமின் மீதான தடை நீடிக்கிறது
ADDED : ஜூன் 25, 2024 03:13 PM

புதுடில்லி: கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு விதித்த தடையை நீட்டித்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திஹார் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான அமர்வு கூறியதாவது: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மனுவை நீதிமன்றம் சரியாக விசாரிக்கவில்லை. ஜாமின் வழங்க முடிவு செய்வதற்கு முன்னர், அமலாக்கத்துறைக்கு சரியான வாய்ப்புகளை வழங்கி இருக்க வேண்டும். அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்யவில்லை எனக்கூறி கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் மீதான இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.