ஸ்வாதி மாலிவால் தாக்குதல் வழக்கு: பிபவ் குமாரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஸ்வாதி மாலிவால் தாக்குதல் வழக்கு: பிபவ் குமாரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஸ்வாதி மாலிவால் தாக்குதல் வழக்கு: பிபவ் குமாரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ADDED : ஜூன் 15, 2024 03:52 PM

புதுடில்லி: ஆம்ஆத்மி எம்.பி., ஸ்வாதி மாலிவால் தாக்கிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவல் ஜூன் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த டில்லி ஆம்ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்திற்கு நேரில் சந்திக்க ராஜ்யசபா எம்.பி. ஸ்வாதி மாலிவால் சென்றார். அப்போது கெஜ்ரிவாலை சந்திக்கவிடாமல் தனிச்செயலர் பிபவ் குமார் அடித்து உதைத்து தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் புகார் அளித்தார்.
ஆஜர்
இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. டில்லி போலீசார் பிபவ் குமாரை கைது செய்தனர். அவருக்கு வழங்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 15) அவர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீட்டிப்பு
அப்போது பிபவ் குமாரின் நீதிமன்ற காவலை ஜூன் 22ம் தேதி நீட்டித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. மீண்டும் ஜூன் 22ம் தேதி அவரை ஆஜர்படுத்துமாறு டில்லி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.