Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சுவாமியே சரணம் ஐயப்பா-15:தினம் ஒரு தகவல்:அறிந்து கொள்வோமா...

சுவாமியே சரணம் ஐயப்பா-15:தினம் ஒரு தகவல்:அறிந்து கொள்வோமா...

சுவாமியே சரணம் ஐயப்பா-15:தினம் ஒரு தகவல்:அறிந்து கொள்வோமா...

சுவாமியே சரணம் ஐயப்பா-15:தினம் ஒரு தகவல்:அறிந்து கொள்வோமா...

ADDED : டிச 01, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
சிவன் அழிக்கும் தொழிலையும்,

மகாவிஷ்ணு காக்கும்

தொழிலையும் செய்பவர்கள்.

இந்த இருவரின் ஐக்கிய

வடிவமாக இருப்பவர்

ஐயப்பன். இதனால்

'ஹரிஹர சுதன்'

எனப்படுகிறார்.

சபரிமலையில் தவக் கோலத்தில் அருள்புரியும்

ஐயப்பன் சன்னதி

ஆண்டின் குறிப்பிட்ட

நாளில் மட்டுமே

திறக்கப்படுகிறது.

சுவாமியை தரிசிக்க குருசுவாமி ஒருவரின் கைகளால் மாலை அணிந்து ஒரு மண்டல காலம் விரதம் இருப்பது அவசியம்.

துளசிமணி மாலையை கையில் வைத்து அதற்குரிய மந்திரங்களை குருசுவாமி சொல்லுவார். அதன் பிறகே பக்தரின் கழுத்தில் அணிவிப்பார்.

மாலை அணிந்திருக்கும் பக்தர்களை சுவாமி, ஐயப்பா என மரியாதையாக குறிப்பிட வேண்டும்.

ஐயப்பனை தரிசிக்க செல்லும் பாதை கரடுமுரடானது. அதில் பயணிக்க மனம், உடல் வலிமை பெற வேண்டும் என்பதற்காகவே விரதம் கடைப்பிடிக்கின்றனர்.

பம்பையில் இருந்து சபரிமலைக்கு 7 கி.மீ., துாரம் பாதயாத்திரையாக நடந்தே செல்ல வேண்டும். இயலாதவர்கள் டோலி என்னும் சேவையை பயன்படுத்தலாம்.

மாலை அணிந்து இருமுடியுடன் வருபவர்கள் மட்டுமே 18 படிகள் ஏற அனுமதிக்கப்படுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us