மணல் குவாரி குறித்த வழக்கு ஒத்திவைப்பு
மணல் குவாரி குறித்த வழக்கு ஒத்திவைப்பு
மணல் குவாரி குறித்த வழக்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 06, 2024 05:45 PM
புதுடில்லி: தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
இன்றைய விசாரணையின் போது, வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த ஆவணம் இல்லை, அந்த ஆவணம் இல்லை என பொத்தாம் பொதுவாக அமலாக்கத்துறை கூறுகிறது. வழக்கை முடிக்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நீங்கள் நீதிமன்ற நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். பிறகு வழக்கை பிற்பகல் ஒத்திவைத்தனர். பிற்பகல் விசாரணைக்கு பிறகு இரண்டு வாரங்கள் ஒத்திவைத்தனர்.