Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ போலீஸ் ஸ்டேஷன் 'சிசிடிவி'க்களை கண்காணிக்க ஏ.ஐ., தொழில்நுட்பம் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

போலீஸ் ஸ்டேஷன் 'சிசிடிவி'க்களை கண்காணிக்க ஏ.ஐ., தொழில்நுட்பம் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

போலீஸ் ஸ்டேஷன் 'சிசிடிவி'க்களை கண்காணிக்க ஏ.ஐ., தொழில்நுட்பம் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

போலீஸ் ஸ்டேஷன் 'சிசிடிவி'க்களை கண்காணிக்க ஏ.ஐ., தொழில்நுட்பம் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

ADDED : செப் 15, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி : 'நாடு முழுதும் போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுவப்பட்ட, 'சிசிடிவி' எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பதை தடுக்கவும், பதிவாகும் காட்சிகளை மேற்பார்வையிடவும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்' என, உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் போலீஸ் காவலில் 11 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அவற்றில், உதய்பூரில் மட்டும் ஏழு மரணங்கள் நிகழ்ந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 4ம் தேதி உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.

இவ்வழக்கு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'போலீஸ் ஸ்டேஷன்களில் 'சிசிடிவி' கேமராக்கள் முறையாக இயங்காதது குறித்து வரும் 26ம் தேதி தனியே உத்தரவு பிறப்பிக்கப்படும்' என தெரிவித்தனர்.

'தற்போது 'சிசிடிவி' கேமராக்கள் சரிவர இயங்குகிறதா? அதை யார் மேற்பார்வையிடுவது என்பது தான் பிரச்னையாக தெரிகிறது' என கூறினர்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் முன்வைத்த ஆலோசனைகள் வருமாறு:

மனித தலையீடு இல்லாத கட்டுப்பாட்டு அறையை உருவாக்குவது தான் இந்த பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். அப்போது தான் அனைத்து 'சிசிடிவி' காட்சிகளும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து சேரும்.

ஏதேனும் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் 'சிசிடிவி' கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தால், அது பற்றி உடனடியாக தெரிவிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் புகுத்த வேண்டும். இதை தவிர, வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

மனித தலையீடு இல்லாமல், ஏ.ஐ., மூலம் ஒரே இடத்தில் இருந்து கொண்டு ஒவ்வொரு 'சிசிடிவி' காட்சிகளையும் கண்காணிக்கும் சாப்ட்வேரை, ஐ.ஐ.டி.,யிடம் இருந்து கேட்டு பெற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us