மாடுகளை கைவிடுவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர்
மாடுகளை கைவிடுவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர்
மாடுகளை கைவிடுவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர்
ADDED : ஜூன் 04, 2025 08:37 PM
புதுடில்லி:மெஹ்ராலி தொகுதி மசூத்பூர் பால் பண்ணை பகுதியில், தெருவில் திரியும் மாடுகள் குறித்து அமைச்சர் கபில் மிஸ்ரா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. செய்தார்.
மெஹ்ராலி எம்.எல்.ஏ., கஜேந்திர சிங் மற்றும் மாநகராட்சி, டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் பங்கேற்றனர். மசூத்பூர் பால் பண்ணை பகுதியில், தெருவில் திரியும் மாடுகளுக்கு பாதுகாப்பான தங்குமிடம் அமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ., கஜேந்திர சிங், “மசூத்பூர் பகுதியில் உள்ள பல பால் பண்ணை உரிமையாளர்கள் பால் உற்பத்தியை நிறுத்திய மாடுகளை விரட்டி விடுகின்றனர். அவை, சாலை மற்றும் தெருக்களில் திரிகின்றன,” என்றார்.
கால்நடைகளைக் கைவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதேபோல, பால் பண்ணைகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவும் நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.