அக்டோபரில் நாடு முழுதும் வாக்காளர் சிறப்பு திருத்த பணி?
அக்டோபரில் நாடு முழுதும் வாக்காளர் சிறப்பு திருத்த பணி?
அக்டோபரில் நாடு முழுதும் வாக்காளர் சிறப்பு திருத்த பணி?
ADDED : செப் 11, 2025 12:40 AM

பீஹாரை தொடர்ந்து நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை அக்டோபரில் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில், பெரும்பாலான மாநிலங்களில் 2002 மற்றும் 2004-க்கு இடையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்கள் தேர்தலில் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், பா.ஜ.,வுக்கு உதவுவதற்காக தேர்தல் ஆணையம் வாக்காளர் குறித்த தரவுகளில் மோசடி செய்துஉள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதனிடையே, பீஹாரை தொடர்ந்து நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள் ள தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த சூழலில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும், தங்கள் மாநிலங்களில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, கடைசியாக எப்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், நாடு முழுதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க டில்லியில் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், நாடு முழுதும் அக்டோபரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளை துவங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், அக்டோபர் மாதத்தில் எந்த நாளிலும் பணியை து வங்கும் வகையில் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் திருத்தப்பணிக்கான வழிமுறைகளை நிறைவு செய்யும்படி தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, பிழையின்றி உருவாக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெ ரிவிக்கின்றன
- நமது சிறப்பு நிருபர் - .