Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தாதாவின் தாயை கொன்றவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

தாதாவின் தாயை கொன்றவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

தாதாவின் தாயை கொன்றவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

தாதாவின் தாயை கொன்றவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

ADDED : ஜூன் 28, 2025 08:29 PM


Google News
சண்டிகர்:பஞ்சாபில், தாதாவின் தாய் உட்பட இருவவரை சுட்டுக் கொன்றவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

பஞ்சாப் மாநிலத்தின் பிரபல தாதா ஜக்கு பகவான்புரியா. இவர் மீது ஏராளமான குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.

மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட ஜக்கு, பதிண்டா சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில், அசாம் மாநிலம் சில்சார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த, 26ம் தேதி, தரன் தரன் நகருக்கு சென்றிருந்த ஜக்குவின் தாய் ஹர்ஜித் கவுர்,52, மற்றும் கரண்வீர் சிங் ஆகிய இருவரும் படாலாவுக்கு காரில் வந்தனர். படாலா சிவில் லைன்ஸ் காதியன் சாலையில் பைக்கில் வந்த இருவர், காருக்குள் இருந்த ஹர்ஜித் மற்றும் கரண்வீர் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரும் அமிர்தசரஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து, படாலா போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பகவான் புரியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் தாதா கும்பல், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கரண்வீர் சிங்கை கொல்வதுதான் எங்கள் இலக்கு. ஆனால், பகவானின் தாய் எதிர்பாராதவிதமாக சிக்கி இறந்து விட்டார்' என கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us