வங்கதேச பிரதமரை சந்தித்த சோனியா, ராகுல், பிரியங்கா: ஆரத்தழுவி வரவேற்பு
வங்கதேச பிரதமரை சந்தித்த சோனியா, ராகுல், பிரியங்கா: ஆரத்தழுவி வரவேற்பு
வங்கதேச பிரதமரை சந்தித்த சோனியா, ராகுல், பிரியங்கா: ஆரத்தழுவி வரவேற்பு
ADDED : ஜூன் 10, 2024 05:31 PM

புதுடில்லி: இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியா, எம்.பி., ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அவர்களை ஆரத்தழுவி வரவேற்றார்.
நரேந்திர மோடி, நேற்று (ஜூன் 9) மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கான விழாவில் பங்கேற்பதற்காக டில்லிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தந்தனர். அந்த வகையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் டில்லி வந்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சி முடிந்து டில்லியில் அவர் தங்கியிருந்தபோது, காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியா, எம்.பி., ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அவர்களை ஆரத்தழுவி வரவேற்றார்.
இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த ராகுல், 'நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவும் வங்கதேசமும் பகிர்ந்து கொள்ளும் இயற்கையான பிணைப்பை மேலும் வலுப்படுத்துவது பற்றி நாங்கள் விவாதித்தோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.