Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை: விமான விபத்தில் தப்பிய விஸ்வாஸ் பேட்டி

உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை: விமான விபத்தில் தப்பிய விஸ்வாஸ் பேட்டி

உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை: விமான விபத்தில் தப்பிய விஸ்வாஸ் பேட்டி

உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை: விமான விபத்தில் தப்பிய விஸ்வாஸ் பேட்டி

ADDED : ஜூன் 13, 2025 12:51 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''எல்லாம் என் கண் முன்னே நடந்தது; நான் உயிருடன் தப்பித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை'' என ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் தெரிவித்தார்.

ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் தனது திகில் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் விழுந்த இடம் விடுதியின் தரைப்பகுதி. என் கண்முன்னே விமான பணி பெண்கள் மற்றும் பயணிகள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்தது.

விமானம் வெடித்த போது எனது இருக்கை அருகே விரிசல் விழுந்தது. அதை பயன்படுத்தி வெளியே குதித்தேன். எனது இடது கையில் தீப்பிடித்தது. உரிய நேரத்தில் மீட்பு படையினர் என்னை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினர். விமானம் விழுந்த பகுதியின் எதிர் பக்கத்தில் சுவர் இருந்ததால் யாரும் தப்பிக்க முடியவில்லை.

தரைப்பகுதி

நான் அமர்ந்திருந்த பகுதியில் மட்டுமே தப்பிக்க இடம் இருந்தது. விபத்து குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டறிந்தார். நானும் இறந்திருப்பேன் என்றே நினைத்தேன். என் கண் முன்னே அனைத்து துயர சம்பவங்களும் நிகழ்ந்தது. விடுதியில் விமானம் மோதிய பக்கம் நான் அமரவில்லை. இது தான் நான் தப்பிக்க உதவியது.



அவசர வழி

சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் தப்பினேன். புறப்பட்ட 30 விநாடிகளில் பெரும் சத்தத்துடன் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் என்னைச் சுற்றிலும் உடல்கள் சிதறிக் கிடந்தன. ஒரு பக்க அவசர வழி சேதமடைந்த நிலையில், மறுபக்க அவசர வழி வழியாக வெளியேறினேன். இவ்வாறு அவர் கூறினார்.



பூமி சவுகான் பேட்டி

விமானத்தை தவறவிட்ட பயணி, பூமி சவுகான் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் விமானத்தை தவறவிட்டேன். இதனால் உயிர் பிழைத்தேன். நான் செல்லவிருந்த விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்ததும் எனது உடல் நடுங்கியது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us