ஜாதிவாரி கணக்கெடுப்பை வைத்து கர்நாடகாவில் பாஜ அரசியல் செய்கிறது; சித்தராமையா குற்றச்சாட்டு
ஜாதிவாரி கணக்கெடுப்பை வைத்து கர்நாடகாவில் பாஜ அரசியல் செய்கிறது; சித்தராமையா குற்றச்சாட்டு
ஜாதிவாரி கணக்கெடுப்பை வைத்து கர்நாடகாவில் பாஜ அரசியல் செய்கிறது; சித்தராமையா குற்றச்சாட்டு
ADDED : செப் 19, 2025 06:27 PM

பெங்களூரு; ஜாதிவாரி கணக்கெடுப்பை வைத்து கர்நாடகாவில் பாஜ அரசியல் செய்கிறது என்று முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
கர்நாடகாவில் அம்மாநில அமைச்சரவை புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒப்புதல் அளித்தது. மேலும், 2015ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த கணக்கெடுப்பை ரத்து செய்தும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது செப்.22ம் தேதி முதல் அக்.7ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந் நிலையில் இந்த கணக்கெடுப்பை வைத்து பாஜ அரசியல் செய்கிறது. காங்கிரசை இந்து விரோத கட்சியாக சித்தரிக்கிறது என்று முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
இந்த விவகாரத்தில் (ஜாதிவாரி கணக்கெடுப்பு) பாஜ அரசியல் செய்து காங்கிரசை இந்துக்களுக்கு விரோதமானது என்று குற்றம் சாட்டுகிறது. அனைத்து அமைச்சர்களும் இதை ஒரு மனதாக கண்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு செப்டம்பர் 22ம் தேதி முதல் தொடங்கும். எக்காரணம் கொண்டும் இது மேலும் ஒத்தி வைக்கப்படாது.
இவ்வாறு முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.