எஸ்.ஐ., கார் கண்ணாடி உடைத்து துப்பாக்கி திருட்டு
எஸ்.ஐ., கார் கண்ணாடி உடைத்து துப்பாக்கி திருட்டு
எஸ்.ஐ., கார் கண்ணாடி உடைத்து துப்பாக்கி திருட்டு
ADDED : செப் 11, 2025 03:24 AM
சிவில்லைன்ஸ் : குற்றப்பிரிவு துணை ஆய்வாளரின் கார் கண்ணாடியை உடைத்து, கைத்துப்பாக்கியை திருடியதாக 'தக்-தக்' கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை மாரீஸ் நகர் உணவகத்திற்கு வெளியே தன் காரை நிறுத்தியிருந்தார். அவர் திரும்பி வந்தபோது, கார் கண்ணாடியை உடைக்கப்பட்டு, அதில் இருந்த காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கி, விலை உயர்ந்த பொருட்கள் உள்ள பை ஆகியவை திருடப்பட்டிருந்தன.
புகாரை அடுத்து போலீசார், சம்பவ இடத்தை சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் உத்தம் நகர் பகுதியை சேர்ந்த அமித், 29, என்பவனை கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதங்கீர் பகுதியில் இருந்து துப்பாக்கியை மீட்டனர்.
விசாரணையில் விலை உயர்ந்த பொருட்களை திருடும் நோக்கில் பையை அமித் எடுத்ததாகவும் அதற்குள் துப்பாக்கி இருந்தது அவருக்கு தெரியாது என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
'தக்-தக்' கும்பலைச் சேர்ந்த அமித் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.