Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இதுக்கு டிரம்புக்கு நோபல் பரிசு தர வேண்டுமா? பாகிஸ்தானை வறுத்தெடுத்த ஓவைசி!

இதுக்கு டிரம்புக்கு நோபல் பரிசு தர வேண்டுமா? பாகிஸ்தானை வறுத்தெடுத்த ஓவைசி!

இதுக்கு டிரம்புக்கு நோபல் பரிசு தர வேண்டுமா? பாகிஸ்தானை வறுத்தெடுத்த ஓவைசி!

இதுக்கு டிரம்புக்கு நோபல் பரிசு தர வேண்டுமா? பாகிஸ்தானை வறுத்தெடுத்த ஓவைசி!

ADDED : ஜூன் 22, 2025 01:21 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 'ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமா' என்று பாகிஸ்தானுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார். டிரம்புக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அவரது பெயரை பரிந்துரை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கண்ணியமான முறையில் சமாதானத்தை நிலைநாட்டியவர் என்ற அடிப்படையில் இந்த பரிந்துரையை மேற்கொள்வதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூன் 22) ஈரானின் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:

ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு, டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமா? என்று பாகிஸ்தானியர்களிடம் நாம் கேட்க வேண்டும். அமெரிக்காவின் இந்த தாக்குதல் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு உதவியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்க அதிபருடன் இரவு உணவு சாப்பிட்டாரா? அவை அனைத்தும் இன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. காசாவில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது, அமெரிக்கா அதைப் பற்றி கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us