Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இந்தியா, பாக் மோதல் எதிரொலி: அமிர்தசரஸில் இன்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடல்

இந்தியா, பாக் மோதல் எதிரொலி: அமிர்தசரஸில் இன்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடல்

இந்தியா, பாக் மோதல் எதிரொலி: அமிர்தசரஸில் இன்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடல்

இந்தியா, பாக் மோதல் எதிரொலி: அமிர்தசரஸில் இன்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடல்

Latest Tamil News
அமிர்தசரஸ்: பதான்கோட் மற்றும் அமிர்தசரஸில் கல்வி நிலையங்கள் இன்றும் (செவ்வாய்கிழமை) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா பாக். இடையே போர் நிறுத்தத்தை தொடர்ந்து பஞ்சாபின் சில மாவட்டங்களில் மூடப்பட்டு இருந்த பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. திங்களன்று மக்கள் தங்களின் இயல்பு நிலையை நோக்கி திரும்பினர். சந்தைகள் வழக்கம் போல் இயங்கின.

இந் நிலையில் நேற்றிரவு மீண்டும் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இன்று (மே 13) முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அமிர்தசரஸில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பதான்கோட், பாசில்கா, பெரோஸ்பூர், டர்ன்தரன் ஆகிய நகரங்களில் பள்ளிகள் மூடப்படும். அமிர்தசரஸில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படும். பேராசிரியர்கள் ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எல்லை அருகில் உள்ள மாவட்டங்களில் மின்தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். மக்கள் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us