டில்லி கார்ப்பரேஷன் நிலைக்குழு தலைவராக சத்யா சர்மா தேர்வு
டில்லி கார்ப்பரேஷன் நிலைக்குழு தலைவராக சத்யா சர்மா தேர்வு
டில்லி கார்ப்பரேஷன் நிலைக்குழு தலைவராக சத்யா சர்மா தேர்வு
ADDED : ஜூன் 12, 2025 07:41 PM
புதுடில்லி:டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் நிலைக்குழுவின் தலைவராக, பா.ஜ., கவுன்சிலர் சத்யா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டில்லி கார்ப்பரேஷனில், 5 கோடி ரூபாய்க்கு மேற்கொண்டு எந்த திட்டங்களை செயல்படுத்தினாலும், நிலைக்குழுவின் ஒப்புதல் அவசியம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக காலியாக இருந்த அந்த குழுவின் தலைமையிடத்திற்கு, நேற்று தேர்தல் நடந்தது.
அதில், 11 ஓட்டுகளை பெற்று, பா.ஜ.,வின் சத்யா சர்மா வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரவீன்குமார் நிறுத்தப்பட்டார். அவருக்கு, ஏழு ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
கவுதம்புரி தொகுதியில் இருந்து மூன்று முறை, கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள சத்யா சர்மா, முந்தைய கிழக்கு டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மேயராக பதவி வகித்தவர். அவரை கட்சியினர் பலர் பாராட்டினர்.