ADDED : மார் 19, 2025 09:13 PM

தங்கவயல்; ராபர்ட்சன்பேட்டை ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் நடந்து வரும் பிரமோத்சவம் முன்னிட்டு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆயினும், போலீசாரின் தடை உத்தரவை மீறி நேற்று முன்தினம் இரவு புஷ்ப பல்லக்கு தேர் பவனியின் போது, ராபர்ட்சன்பேட்டை புல் மார்க்கெட் பகுதியில் மதுபானம் விற்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு குடித்து கொண்டிருந்தவர்கள், மது டம்ளருடன் ஓட்டம் பிடித்தனர்.
விற்பனைக்கு வைத்திருந்த மதுபானத்தை விட்டு சிலர் தலைமறைவாயினர். தடியால் அடித்து போலீசார் விரட்டினர்.
அவர்கள் விட்டுச்சென்ற 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.