பா.ஜ., இண்டியா கூட்டணியை சாடும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்
பா.ஜ., இண்டியா கூட்டணியை சாடும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்
பா.ஜ., இண்டியா கூட்டணியை சாடும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்
UPDATED : ஜூன் 15, 2024 03:07 AM
ADDED : ஜூன் 15, 2024 02:52 AM

ஜெய்ப்பூர்: “ராமரை எதிர்த்தவர்கள் யாராலும் அதிகாரத்தைப் பெற முடியவில்லை, அவர்கள் ஒன்று கூடினாலும், நம்பர் ஒன்னுக்குப் பதிலாக இரண்டாவது இடத்தில் நின்றனர் என ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்தரேஷ்குமார் பா.ஜ., மற்றும் இண்டியா கூட்டணியை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 400 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்க்கப்பட்டது தே.ஜ., கூட்டணிக்கு சறுக்கல் என கூறப்படுகிறது. அதே நேரம் இண்டியா கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில் ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்தரேஷ்குமார் கூறியது,
லோக்சபா தேர்தலில் ஒரு கட்சிக்கு ராமர் மீது அதீத பக்தி. ஆனால் அக் கட்சிக்கு அகம்பாவமும் ஆணவமும் வந்துவிட்டது. ஆவணத்தால் தான் ராமர் அதிக இடங்கள் தராமல் வெறும் 241 இடங்களுடன் நிறுத்திவிட்டார் ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், ராமருக்கு எதிராக முழக்கமிடுகிறவர்களுக்கு 234 இடங்கள் மட்டுமே கொடுத்து அவர்களையும் தடுத்து நிறுத்தியவர் ராமர்தான்.
எனவே மக்களைப் பாதுகாக்கிற ராமர், ராவணனுக்குக் கூட நல்லது செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு இந்தரேஷ் குமார் தெரிவித்துள்ளார். பா.ஜ., இந்தியா கூட்டணியின் பெயர்களை குறிப்பிடாமல் மறைமுகமாக இந்தரேஷ் குமார் விமர்சித்தாலும் பாஜ தலைவர்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.