ADDED : ஜூன் 27, 2025 08:31 PM
புதுடில்லி:காணாமல் போன சிறுவர், சிறுமியர் மீட்கப்பட்டனர்.
கடந்த, 7ம் தேதி சமய்பூர் பட்லியில், 15 வயது சிறுமி மாயமானார். சமூக ஊடகங்களிலேயே மூழ்கிக் கிடந்ததால், பெற்றோர் திட்டியதை அடுத்து, வீட்டில் இருந்து சென்றதாக கூறப்பட்டது. உத்தரப் பிரதேசத்துக்கு ரயிலில் சென்ற போது, கண்டுபிடிக்கப்பட்டான்.
அதே நாளில், அதே பகுதியில் 15 வயது சிறுவனும் காணாமல் போனான். ஆனால், சமய்பூர் பட்லி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டான். மது போதையில் தந்தை திட்டிக் கொண்டே இருந்ததால், வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினான்.
அதேபோல, 24ம் தேதி பேகம்பூரில், 12 வயது சிறுமி மாயமானாள். மங்கோல்புரியில் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 13ல் காணாமல் போன, 12 வயது சிறுமி இரண்டரை மாதங்களுக்குப் பின், துவாரகாவில் கண்டுபிடிக்கப்பட்டான்.