பாக்., தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
பாக்., தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
பாக்., தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
ADDED : மே 29, 2025 07:51 PM

புதுடில்லி: பாகிஸ்தானின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மற்றும் பிற பகுதியை சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, காஷ்மீரில் பொது மக்கள் வசித்த பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் முறியடித்தது. அதேநேரத்தில் அந்த பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சேதம் ஏற்பட்டது. இந்த பகுதிகளை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: அந்தக் கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது: சமீபத்தில் நான் ஜம்மு காஷ்மீரின் பூஞ்சிற்கு சென்று இருந்தேன். பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக 4 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த கண்மூடித்தனமான தாக்குதல் அப்பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் பலர், தங்களின் பல வருட கடின உழைப்பு ஒரே அடியில் வீணாகிவிட்டதாகக் கூறினர்.
பூஞ்ச் மற்றும் பிற எல்லைப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக அமைதியுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இந்த ஆழமான நெருக்கடியைக் கடந்து வரும்போது, அவர்களின் வலியைப் புரிந்துகொண்டு அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து உதவிகளையும் வழங்குவது நமது கடமையாகும்.
பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மற்றும் பிற அனைத்து பகுதிகளுக்கும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் தொகுப்பை வழங்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.