தமிழகத்தை சேர்ந்த ராஜா சுப்ரமணி ராணுவ துணை தளபதியாக பொறுப்பேற்பு
தமிழகத்தை சேர்ந்த ராஜா சுப்ரமணி ராணுவ துணை தளபதியாக பொறுப்பேற்பு
தமிழகத்தை சேர்ந்த ராஜா சுப்ரமணி ராணுவ துணை தளபதியாக பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 09, 2024 10:21 PM

புதுடில்லி: ராணுவ துணைத் தலைமைத் தளபதியாக லெப்டினட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்றார்.
இந்திய ராணுவ தளபதியாக இருந்த மனோஜ்பாண்டே கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடா்ந்து ராணுவத்தின் துணை தளபதியாக லெப்டினட் ஜெனரல் ராஜா சுப்ரமணி பெயரை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதையடுத்து கடந்த 01-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் 1985ம் ஆண்டு டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் பணியில் சேர்ந்தார். தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் ,இந்திய ராணுவ கல்விக் கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில், எம்.பில் பட்டம் பெற்றார். மேலும் டில்லி, லண்டனில் பயின்றுள்ளார்.ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.