ராகுல் இரட்டை குடியுரிமை வழக்கு ; 4 வாரத்துக்குள் முடிவெடுக்க உத்தரவு
ராகுல் இரட்டை குடியுரிமை வழக்கு ; 4 வாரத்துக்குள் முடிவெடுக்க உத்தரவு
ராகுல் இரட்டை குடியுரிமை வழக்கு ; 4 வாரத்துக்குள் முடிவெடுக்க உத்தரவு
ADDED : மார் 25, 2025 02:50 AM
லக்னோ : ராகுல் மீதான இரட்டை குடியுரிமை வழக்கில், ஏப்., 21க்குள் முடிவெடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது.
காங்., - எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் குடியுரிமை பெற்றுள்ளதாகக் கூறி, கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் ஷிஷிர், உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் மனு தாக்கல் செய்தார்.
'நம் நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ள ராகுல், பிரிட்டனின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். இரட்டை குடியுரிமை வைத்திருப்பது சட்டப்படி குற்றம். இது குறித்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று, உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் விசாரணைக்கு வந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது குறித்து முடிவெடுக்க எட்டு வாரங்கள் அவகாசம் கேட்டார்.
இதை நிராகரித்த நீதிமன்றம், நான்கு வாரங்கள் அதாவது ஏப்., 21க்குள் முடிவெடுக்கும்படி உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை அன்ைறய தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதே விவகாரத்தில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.