கல்வி நிறுவனங்களில் தொடரும் ராகிங் சம்பவங்கள்; 89 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு யு.ஜி.சி., நோட்டீஸ்
கல்வி நிறுவனங்களில் தொடரும் ராகிங் சம்பவங்கள்; 89 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு யு.ஜி.சி., நோட்டீஸ்
கல்வி நிறுவனங்களில் தொடரும் ராகிங் சம்பவங்கள்; 89 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு யு.ஜி.சி., நோட்டீஸ்

புதுடில்லி: நாடு முழுவதும் ராகிங் விதிமுறைகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் புதிய மாணவர் சேர்க்கை நடக்கும்போது, ராகிங் நிகழும். இதைத் தடுக்க, யு.ஜி.சி., பல நடவடிக்கைகளை எடுத்தது. 2014ம் ஆண்டு பல்கலை, கல்லுாரி, கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்க, முற்றிலுமாக நீக்க, புதிய விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டன.
பல கல்வி நிறுவனங்கள் ராக்கிங் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வில்லை என, யு.ஜி.சி.,க்கு புகார் தெரிவிக்கப்பட்டது. ராகிங் தடுப்பு வழிமுறைகளை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யு.ஜி.சி., சமீபத்தில் அறிவித்திருந்தது.
தற்போது, நாடு முழுவதும் ராகிங் விதிமுறைகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவ்வாறு விளக்கம் அளிக்கவில்லை எனில், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராகிங் எதிர்ப்பு கட்டமைப்பை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என யு.ஜி.சி., செயலாளர் மணீஷ் ஆர். ஜோஷி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.