நடைபாதை வியாபாரிகளை பாதுகாக்க கொள்கை முடிவு
நடைபாதை வியாபாரிகளை பாதுகாக்க கொள்கை முடிவு
நடைபாதை வியாபாரிகளை பாதுகாக்க கொள்கை முடிவு
ADDED : மே 27, 2025 09:11 PM
விக்ரம்நகர்:“நடைபாதை வியாபாரிகளை பாதுகாக்க விரைவில் கொள்கை உருவாக்கப்படும்,” என, மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் உறுதி அளித்தார்.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் நடைபாதை வியாபாரிகள் மீது மாநகராட்சியும் காவல் துறையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்திய தேசிய தெரு வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆஷிஷ் சூட்டை சந்தித்து முறையிட்டனர்.
அமைச்சருடனான சந்திப்புக்குப் பின் இந்திய தேசிய தெரு வியாபாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அர்பிந்த் சிங் கூறியதாவது:
நடைபாதை வியாபாரிகளை பாதுகாக்கும் தெரு வியாபாரிகள் சட்டம் - 2014 குறித்து அமைச்சரிடம் விரிவாக விளக்கப்பட்டது.
நகரின் முறைசாரா பொருளாதாரத்தில் நடைபாதை வியாபாரிகளின் பங்கை அமைச்சர் ஒப்புக்கொண்டார். நடைபாதை வியாபாரிகளை வரைமுறைப்படுத்த தேவையான விஷயங்களை பட்டியலிடும்படி கேட்டுக் கொண்டார்.
இந்த பிரச்னை தொடர்பாக மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட தொடர்புடைய துறைகளுடன் ஆலோசனை நடத்தப்போவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
நடைபாதை வியாபாரிகளை பாதுகாக்க விரைவில் கொள்கை உருவாக்க அமைச்சர் உறுதிபூண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.