குற்றவாளியை தப்ப வைத்த போலீஸ்காரருக்கு 'ஓராண்டு' சிறை தண்டனை
குற்றவாளியை தப்ப வைத்த போலீஸ்காரருக்கு 'ஓராண்டு' சிறை தண்டனை
குற்றவாளியை தப்ப வைத்த போலீஸ்காரருக்கு 'ஓராண்டு' சிறை தண்டனை
ADDED : ஜூன் 13, 2025 09:01 PM
முசாபர்நகர்:போலீஸ் காவலில் இருந்து தப்பித்ததாக, போலீஸ்காரர் மற்றும் ஒருவருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யின் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றிலிருந்து, 2023ல், சுமித்குமார் என்ற குற்றவாளியை தப்ப வைக்க உதவி புரிந்ததாக, போலீஸ்காரர் பவன்குமார் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உ.பி., முசாபர்நகரில் உள்ள நீதிமன்றம், குற்றவாளியை தப்ப விட்ட போலீஸ்காரருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது.
போலீஸ்காரருடன் சுமித்குமாருக்கும், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவருக்கும், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.