ஜூலையில் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி?
ஜூலையில் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி?
ஜூலையில் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி?
ADDED : ஜூன் 25, 2024 03:34 PM

புதுடில்லி: பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமரின் பயணம் குறித்து நம் நாட்டு அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. இதற்கு முன் 2019 ஆண்டு செப்., மாதம் மோடி ரஷ்யா சென்று இருந்தார்.
இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது; மோடியின் ரஷ்ய பயணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம் எனக்கூறப்பட்டு உள்ளது.
இதுவரை இந்தியா ரஷ்யா உச்சி மாநாடு 21 முறை நடந்துள்ளது. கடைசியாக 2021 டிச.,26 ல் டில்லியில் நடந்த இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொண்டார்.