Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/' ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

' ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

' ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

' ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

ADDED : ஜூன் 28, 2025 03:58 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி : 'ரா ' உளவுப்பிரிவின் தலைவராக 1989 ம் ஆண்டு பேட்சை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார்.

' ரா ' உளவுப்பிரிவின் தலைவராக இருப்பவர் ரவி சின்ஹா. இவர் வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து காலியாகும் அந்த பதவிக்கு புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் பிறகு பொறுப்பு ஏற்கும் பராக் ஜெயின், இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, நியமனத்துக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்து உள்ளது.

உளவுத்துறை மத்தியில் சிறந்த உளவாளி என்ற பெயர் பராக் ஜெயினுக்கு உண்டு. தற்போது ஏவியேஷன் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக உள்ளார். அங்கிருந்தே, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் குறித்த தகவல்களை சேகரித்தார். இதன் மூலம், ' ஆபரேஷன் சிந்தூர் ' நடவடிக்கைக்கு முக்கிய பங்காற்றினார்.

பஞ்சாபில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய போது, பதின்டா, மான்சா, ஹோஷியாப்பூர் பகுதிகளில் இவரது பணி சிறப்பாக இருந்தது. சண்டிகர் எஸ்எஸ்பி ஆகவும், லூதியானா டி.ஐ.ஜி., ஆகவும் பணியாற்றி உள்ளார்.காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட போதும், பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போதும், இந்தியாவின் வெளிநாடு உளவு முகமை அமைப்பில் பாகிஸ்தானை கையாண்டார். இவ்வாறு பல்வேறு பதவிகளை வகித்த அவர், 2021 ஜன., 1ல் பஞ்சாப் டி.ஜி.பி., ஆக பதவி உயர்வு பெற்றார்.

கனடா, மற்றும் இலங்கையில் இந்தியா சார்பில் பணியாற்றி உள்ளார். கனடாவில் பணியாற்றிய போது, காலிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை அனுப்பி வந்தார். ஜம்மு காஷ்மீரிலும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us