Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ உளவு பார்க்க இந்திய 'யு டியூபர்'களுக்கு சலுகைகளை அள்ளி வீசிய பாக்., பெண்

உளவு பார்க்க இந்திய 'யு டியூபர்'களுக்கு சலுகைகளை அள்ளி வீசிய பாக்., பெண்

உளவு பார்க்க இந்திய 'யு டியூபர்'களுக்கு சலுகைகளை அள்ளி வீசிய பாக்., பெண்

உளவு பார்க்க இந்திய 'யு டியூபர்'களுக்கு சலுகைகளை அள்ளி வீசிய பாக்., பெண்

ADDED : ஜூன் 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: நம் நாட்டு நடவடிக்கைகளை உளவு பார்க்க இங்குள்ள சமூக வலைதள பிரபலங்களுக்கு, பாகிஸ்தான் பெண் தொழிலதிபர் ஒருவர் உதவியது தெரிய வந்து உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஆடம்பர வாழ்க்கை


அரசு ஊழியர், துணை ராணுவப் படை வீரர், பொறியாளர், யு டியூப் பிரபலங்கள் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட யு டியூபர்கள் ஜோதி மல்ஹோத்ரா, ஜஸ்பிர் சிங் உள்ளிட்டோர் பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்று வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

குறைந்த வருமானத்தில், ஆடம்பர வாழ்க்கையை இவர்கள் வாழ்ந்து வந்ததும் அம்பலமானது.

ஜோதி மல்ஹோத்ரா, ஜஸ்பிர் சிங் உட்பட பிரபல யு டியூபர்களை பாகிஸ்தான் அழைத்துச் சென்று பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதே, இந்த ஆடம்பர வாழ்க்கைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

இதற்கு, அங்குள்ள பெண் தொழிலதிபரும், டிராவல்ஸ் நிறுவன உரிமையாளருமான நோஷபா ஷெசாத் என்பவரே காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் புலனாய்வு அதிகாரிகள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து புலனாய்வு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நோஷபா ஷெசாத் என்பவர், பாக்., - ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பில் பணியாற்றியவர்.

'ஜெயானா டிராவல்ஸ் அண்டு டூர்ஸ்' என்ற பெயரில், அங்கு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பால் அடையாளம் காட்டப்பட்ட இந்திய யு டியூபர்களை, பாகிஸ்தானுக்கு வரவழைத்து பல்வேறு சலுகைகளை அளித்துள்ளார்.

விசாரணை


பதிலுக்கு நம் நாட்டில் உள்ள முக்கிய இடங்கள் தொடர்பான விபரங்களை இவர்கள் வழங்கிஉள்ளனர்.

பாக்., உளவு அமைப்பால், 'மேடம் என்' என, அழைக்கப்படும் நோஷபா, நம் நாட்டில், 500க்கு மேற்பட்ட 'ஸ்லீப்பர் செல்' எனப்படும் உளவு பார்க்கும் நபர்களை நியமிக்க திட்டமிட்டிருந்தார்.

நம் நாட்டில் ஸ்லீப்பர் செல் வலையமைப்பை நிறுவ ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு மற்றும் பாக்., ராணுவம் இவருக்கு பயிற்சி அளித்துள்ளது.

டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டேனிஷ் உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் நோஷபா தொடர்பில் இருந்துள்ளார்.

ஒரே தொலைபேசி அழைப்பில் விசா வாங்கி தரும் செல்வாக்கையும் அவர் பெற்றிருந்தார்.

கடந்த ஆறு மாதங்களில் 3,000 இந்தியர்கள் மற்றும் 1,500 வெளிநாடுவாழ் இந்தியர்கள் பாகிஸ்தான் சென்றுவர, நோஷபா உதவியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us