பஞ்சாபில் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது
பஞ்சாபில் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது
பஞ்சாபில் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது
ADDED : மே 21, 2025 10:05 PM
சண்டிகர்:பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், சர்வதேச எல்லையைத் தாண்டியபோது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
எல்லைப் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் கரிம்புரா கிராமம் அருகே, சர்வதேச எல்லையைத் தாண்டி ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் நேற்று முன் தினம் மாலை கைது செய்யப்பட்டார். எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்திய பின், மேல் விசாரணைக்காக அமிர்தசரஸ் போலீசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.