முதியோர் ஓய்வூதிய பிரச்னை 15 நாட்களில் தீர்க்க உத்தரவு
முதியோர் ஓய்வூதிய பிரச்னை 15 நாட்களில் தீர்க்க உத்தரவு
முதியோர் ஓய்வூதிய பிரச்னை 15 நாட்களில் தீர்க்க உத்தரவு
ADDED : ஜூன் 05, 2025 07:08 PM
புதுடில்லி:முதியோர் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும், 15 நாட்களில் தீர்க்கும்படி, அதிகாரிகளுக்கு, டில்லி சமூக நலத்துறை அமைச்சர் ரவீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
டில்லி சமூக நலத்துறை அமைச்சர் ரவீந்தர் இந்திரஜ் சிங் கூறியதாவது:
டில்லியில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, சமூக நலத்துறை திட்டங்களின் பயனாளிகளிடம் குறைகளை கேட்டு வருகிறேன். முதியோர் ஓய்வூதியம் தொடர்பாகத் தான் ஏராளமானோர் குறைகளை தெரிவித்துள்ளனர். இதனால், சமூக நலத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். ஓய்வூதியம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும், 15 நாட்களுக்குள் தீர்வு காணும்படி சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் ரேகா குப்தா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோர். எனவே, இந்த விஷயத்தில் அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.