'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
ADDED : மே 14, 2025 12:45 PM

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சந்தித்து பேசினர்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில், அங்குள்ள ஒன்பது பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.
எல்லைக்கோட்டை தாண்டாமல், ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா நடத்தி முடித்த துல்லிய தாக்குதல், உலக நாடுகளை அசர வைத்தது. தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இன்று (மே 14) 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சந்தித்து பேசினர்.
ராணுவ தளபதி உபேந்திர திவேதி, விமானப் படைத் தளபதி மார்ஷல், கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து, திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து எடுத்துரைத்தனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடியை, மகத்தான வெற்றியாக மாற்றிய முப்படையினரை ஜனாதிபதி பாராட்டினார். ஜனாதிபதியை முப்படை தளபதிகள் சந்தித்த புகைப்படத்தை ஜனாதிபதி மாளிகை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.