ரூ.970.74 கோடிக்கு ஓணம் மது விற்பனை
ரூ.970.74 கோடிக்கு ஓணம் மது விற்பனை
ரூ.970.74 கோடிக்கு ஓணம் மது விற்பனை
ADDED : செப் 09, 2025 03:20 AM

திருவனந்தபுரம் : கேரளாவில், ஓணம் பண்டிகை கடந்த 5ம் தேதி சிறப்பாக கொண்டாப்பட்டது. இதையொட்டி ஆக., 25 முதல் செப்., 6 வரை மது விற்பனையும் களைகட்டியது.
'பெவ்கோ' எனப்படும், கேரள மாநில பானங்கள் கழக உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தின் 278 கடைகள் மற்றும் 155 சுயசேவைப்பிரிவு கடைகளில் இந்த சீசனில், 970.74 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, கே.எஸ்.பி.சி., எனப்படும் கேரள மாநில பானங்கள் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கேரளாவில் ஓணம் பண்டிகை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மது விற்பனை நடந்துள்ளது.
முந்தைய ஆண்டில் 842.07 கோடி ரூபாயாக இருந்த மது விற்பனை, நடப்பாண்டு, 9.34 சதவீதம் அதிகரித்து 970.74 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.