ADDED : செப் 05, 2025 12:28 AM

சபரிமலை:சபரிமலையில் நேற்று தொடங்கிய திருவோண விருந்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவோண பூஜைக்காக சபரிமலை நடை செப்., 3ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.
அன்று விசேஷ பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான அபிஷேகம், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு படி பூஜை, அத்தாழ பூஜை நடந்தது.
பின்னர் திருவோண விருந்தில் நேற்று உத்திராடம் விருந்து நடந்தது. இன்று திருவோண விருந்தும், நாளை ஒன்றாம் ஓணம் விருந்தும் நடைபெறும். திருவோண நாளில் ஐயப்பனை வழிபட திரளான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.
சன்னிதானத்தின் வலதுபுறம் பிரமாண்ட அத்தப்பூ கோலத்தை தேவசம் போர்டு ஊழியர்களும், பக்தர்களும் இணைந்து அமைத்துள்ளனர்.