ADDED : ஜூன் 05, 2025 11:49 PM

கடந்த ஆண்டில் இருசக்கர வாகனம், கார் விற்பனை குறைந்துள்ளது. மறுபுறம், செலவுகள் மற்றும் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வீட்டு வாடகை, பணவீக்கம், கல்வி செலவுகள் என, அனைத்தும் விலை உயர்ந்து வருகின்றன. இவை வெறும் புள்ளி விபரங்கள் அல்ல; மக்கள் சந்திக்கும் பிரச்னை.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
ஒன்பதாம் வகுப்பு பெயில்!
லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, ஒன்பதாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை. அவர், பீஹாரின் முதல்வராக வேண்டும் என லாலு பிரசாத் நினைக்கிறார். குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை, அவரிடம் இருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
பிரசாந்த் கிஷோர், தலைவர், ஜன் சுராஜ்
முற்றுப்புள்ளி வைக்கும்!
காஷ்மீர் ரயில் இணைப்பு சேவை இன்று துவங்கப்படவுள்ளது. இந்த நாளுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறேன். ரயில் சேவையின் துவக்கம், மக்கள் அதிக செலவு இல்லாமல் பயணிக்க உதவும். கொள்ளையடிக்கும் சில விமான நிறுவனங்களின் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி