சாராயத்தால் மரணம் அல்ல; கொலை: பாஜ., கடும் தாக்கு
சாராயத்தால் மரணம் அல்ல; கொலை: பாஜ., கடும் தாக்கு
சாராயத்தால் மரணம் அல்ல; கொலை: பாஜ., கடும் தாக்கு
UPDATED : ஜூன் 23, 2024 03:11 PM
ADDED : ஜூன் 23, 2024 01:38 PM

புதுடில்லி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்டது மரணம் அல்ல; கொலை என பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி குறித்து விவாதிக்க இங்கு கூடி உள்ளோம். 56 பேர் உயிரிழந்த நிலையில் 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது முக்கியமான விஷயம். காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் இந்த விஷயம் குறித்து பேசாமல் மவுனமாக உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் இன்னும் சட்டவிரோதமாக கள்ளச்சாராய கடைகள் செயல்படுகின்றன. தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச்சாராய இறப்பிற்கு காரணமான முக்கிய புள்ளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர். இறந்தவர்களில் 40 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். கள்ளச்சாராய மரணத்திற்கு தி.மு.க.,வே காரணம். அங்கு நிகழ்ந்தது மரணம் அல்ல. கொலை. இவ்வாறு அவர் கூறினார்.