Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அர்த்தமில்லை

அர்த்தமில்லை

அர்த்தமில்லை

அர்த்தமில்லை

ADDED : அக் 15, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
சிறையில், 30 நாட்களுக்கு மேல் அடைக்கப்படும் தலைவர்களின் பதவியை பறிக்கும் மசோதாவை எங்கள் கட்சி எதிர்க்கிறது. இது, தொடர்பாக விவாதிக்க பார்லி., கூட்டுக் குழுவில் இடம்பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதனால், காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் உறவை முறித்துக் கொள்வதாக அர்த்தமில்லை.

சுப்ரியா சுலே, லோக்சபா எம்.பி., தேசியவாத காங்., - சரத் சந்திர பவார்

மத்திய அரசு அலட்சியம்


மேற்கு வங்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், நிதி வழங்காமல் மத்திய அரசு அலட்சியமாக செயல்படுகிறது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த விமர்சனம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது. அவர்களின் தோளோடு தோளாக நிற்பதே உண்மையான உதவி.

மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

புதிய துவக்கம்


நக்சல் தலைவர் வேணுகோபால் சரண் அடைந்தது நக்சல் இயக்கத்துக்கு முடிவுரையாகவும் மஹாராஷ்டிராவுக்கு புதிய துவக்கமாகவும் அமைந்துள்ளது. மீதமுள்ளவர்களும் சரணடைந்தால், வரும் நாட்களில், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவில் உள்ள முழு சிவப்பு வழித்தடமும் நக்சல்வாதம் இல்லாததாக மாறும்.

தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிர முதல்வர், பா.ஜ.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us