Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு

உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு

உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு

உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு

ADDED : ஜூன் 03, 2025 05:12 PM


Google News
Latest Tamil News
திருவனந்தபுரம்: அங்கன்வாடிகளில் உப்புமாவிற்கு பதில் பிரியாணி வழங்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய மெனு தயார் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

ஜனவரி மாதம் ஷங்கு என்ற குழந்தை தனது அங்கன்வாடி உணவில் உப்புமாவிற்கு பதிலாக, பிரியாணி, சிக்கன் வழங்க வேண்டும் என கேட்கும் ஒரு வைரல் வீடியோ வைரல் ஆகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அந்த வீடியோவில், தொப்பி அணிந்திருந்த குழந்தை, 'எனக்கு அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி மற்றும் பொரித்த கோழி வேண்டும் என்று அப்பாவி போல் தனது தாயிடம் கேட்கும் காட்சி இடம் பெற்று இருந்தது.

தற்போது, ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார். கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இப்போது அங்கன்வாடி உணவு மெனுவைத் திருத்தியுள்ளது. உப்புமாவிற்கு பதில் பிரியாணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட மெனு விபரம் பின்வருமாறு:

திங்கட்கிழமை

காலை உணவு: பால், அரிசி உருண்டை, கொழுக்கட்டை

மதிய உணவு: சாதம், பச்சைப்பயறு கறி, உப்பேரி

தின்பண்டங்கள்: தானியங்கள், பாயாசம்

செவ்வாய்க்கிழமை

காலை உணவு: நியூட்ரி லட்டு (Nutri laddoo)

மதிய உணவு: முட்டை பிரியாணி அல்லது முட்டை புலாவ், பழங்கள்

தின்பண்டங்கள்: பாரம்பரிய ராகி

புதன்கிழமை

காலை உணவு: பால், அரிசி உருண்டை, கொழுக்கட்டை,வேர்க்கடலை

மதிய உணவு: பச்சை பயிறு கஞ்சி, சோயா ப்ரை

தின்பண்டங்கள்: இட்லி, சாம்பார், புட்டு, பச்சைப் பட்டாணி

வியாழக்கிழமை

காலை உணவு: ராகி

மதிய உணவு: சாதம், முளைகட்டிய பச்சைப்பயிறு, கீரை பொரியல், சாம்பார், முட்டை ஆம்லெட்

தின்பண்டங்கள்- பழங்கள்.

வெள்ளிக்கிழமை

காலை உணவு: பால், கொழுக்கட்டை

மதிய உணவு: சாதம், பச்சைப்பயிறு கறி, அவியல், காய்கறிகள்

தின்பண்டங்கள்: உடைத்த கோதுமை புலாவ்.

சனிக்கிழமை

காலை உணவு: ஊட்டச்சத்து லட்டு

மதிய உணவு: காய்கறி புலாவ், முட்டை, ரைதா

தின்பண்டங்கள்: தானிய பாயாசம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us