உலக நாடுகள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள்: ராணுவ தலைமை தளபதி வருத்தம்
உலக நாடுகள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள்: ராணுவ தலைமை தளபதி வருத்தம்
உலக நாடுகள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள்: ராணுவ தலைமை தளபதி வருத்தம்
ADDED : மார் 16, 2025 07:31 PM

புதுடில்லி: ''மாறி வரும் புவி அரசியல் சூழல்களால் உலக நாடுகள் புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளன,'' என்று இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறினார்.
உலகம் சந்தித்துவரும் புதிய சவால்கள் குறித்து உபேந்திர திவேதி கூறியதாவது:
ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான், வங்க தேசம் மற்றும் பல்வேறு நாடுகள், புதிய சவால்களை சமாளிக்க முடியாமல், திணறிய நிலையில் அங்குள்ள அரசுகள் வீழ்ச்சியடைந்தன.
ஒரு அரசு எத்தனை ஆண்டுகள் பதவியில் நீடிக்கிறது என்பதை பொறுத்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரின் வீழ்ச்சியும், ஒரு நாட்டி்ன அணுகுமுறையை முற்றிலும் மாற்றி விடுகிறது. அமெரிக்கா, கனடா அல்லது வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.
உக்ரைன் மற்றும் காசாவில் நடந்த இரண்டு பெரிய மோதல்கள் இப்போது தான் தணிய தொடங்கியுள்ளன. பெரும்பாலான நாடுகள் யதார்த்த அடிப்படை, லட்சியவாதம் அல்லது மதத்தின் அடிப்படையில் ஏதேனும் ஒரு தரப்புக்கு ஆதரவு அளித்தன.
பயங்கரவாதம், தீவிரவாதத்தை உருவாக்குதல், பரந்த அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் சைபர் தாக்குதல்கள் மற்றும் ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்திற்கு மாறுவது போன்ற உலகளாவிய பொதுவான அச்சுறுத்தல்களுடனும் இத்தகைய பிரச்னைகளும் சேர்ந்து கொள்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து உலக அமைதிக்கு பெரும் சவால்களாக உள்ளன.
இவ்வாறு உபேந்திர திவேதி கூறினார்.