பாலாற்றில் புதிய தடுப்பணை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்
பாலாற்றில் புதிய தடுப்பணை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்
பாலாற்றில் புதிய தடுப்பணை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்
ADDED : ஜூன் 25, 2024 06:00 PM

அமராவதி: பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள சித்தூரில் கால்வாய் கட்டும் பணி நடந்து வருவதை, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும். ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு, அதனை பொன்னாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திர அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
தற்போது பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதற்கு, தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பு இருக்கிறது.