Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/'நீட்' முதுநிலை மாணவர் சேர்க்கை: நெறிமுறை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்!

'நீட்' முதுநிலை மாணவர் சேர்க்கை: நெறிமுறை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்!

'நீட்' முதுநிலை மாணவர் சேர்க்கை: நெறிமுறை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்!

'நீட்' முதுநிலை மாணவர் சேர்க்கை: நெறிமுறை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்!

Latest Tamil News
புதுடில்லி: நீட் முதுநிலை மாணவர் சேர்க்கை தொடர்பாக நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளது.

கலந்தாய்வு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், முறைகேட்டைத் தடுப்பதற்கும் நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் ஜே.ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு,நீட் முதுநிலை மாணவர் சேர்க்கை தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:

* தேசிய அளவில் கலந்தாய்வு அட்டவணை, அனைத்து விதமான கட்டணத்தையும் வெளியிட வேண்டும்.

* தவறிழைக்கும் கல்லூரிகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை வேண்டும்.

* முதுகலை மருத்துவப் படிப்பிற்கு நாடு முழுமைக்கும் ஒரே கலந்தாய்வு அட்டவணை தயார் செய்ய வேண்டும்.

* அனைத்து மருத்துவக் கல்வி நிலையங்களும் கட்டண விவரங்களை முன்கூட்டியே வெளியிடுவது கட்டாயம்.

* கலந்தாய்வு கட்டணம் கல்வி கட்டணம் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

* தேசிய அளவில் கட்டண ஒழுங்குமுறை கட்டமைப்பை தேசிய மருத்துவ ஆணையம் நிறுவ வேண்டும்.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முதுகலை மருத்துவப்படிப்பில் முன்கூட்டியே சீட் பிளாக் செய்யப்படுவதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us